அமைதிப்படை முதல் உணவுத் திட்டம் வரை எல்லாம் முடங்கும்! - நிதி நெருக்கடியால் உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள 'ரெட் அலர்ட்'...!
From peacekeeping forces food programs everything paralyzed red alert issued world nations due financial crisis
ஐக்கிய நாடுகள் சபை (UN) தற்போது ஒரு மிக மோசமான நிதி நெருக்கடியின் விளிம்பில் நின்று கொண்டிருப்பதாக அதன் பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டெரெஸ் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உடனடியாகத் தீர்வு காணப்படாவிட்டால், ஐ.நா.வின் செயல்பாடுகள் முடங்கும் அபாயம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், "உறுப்பு நாடுகள் தங்களின் நிதிப் பங்களிப்பை உரிய நேரத்தில் முழுமையாகச் செலுத்த வேண்டும்; இல்லையெனில், இந்த நிதிச் சரிவைத் தடுக்க தற்போதைய நிதி விதிகளையே மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்" எனத் தனது கடிதத்தில் கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.

குட்டெரெஸ் தனது கடிதத்தில் குறிப்பிட்ட எந்த நாட்டின் பெயரையும் சுட்டிக்காட்டவில்லை என்றாலும், ஐ.நா.வின் மிகப்பெரிய நிதி ஆதாரமாக விளங்கும் அமெரிக்கா செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையே இந்த நெருக்கடிக்கு முதன்மைக் காரணமாகக் கருதப்படுகிறது.
வழக்கமான வரவு செலவுத் திட்டத்திற்காக 2.16 பில்லியன் டாலர்களும், நடப்பு ஆண்டிற்காக 767 மில்லியன் டாலர்களும் என அமெரிக்கா ஒரு பெரும் தொகையைப் பாக்கி வைத்துள்ளது.
2025-ஆம் ஆண்டின் இறுதியில் அமெரிக்கா செலுத்த வேண்டிய மொத்த நிலுவைத்தொகை 1.568 பில்லியன் டாலராக உயரும் என்றும், இது 2024-ஐ விட இரண்டு மடங்கு அதிகம் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.மறுபுறம், கடும் பொருளாதாரச் சிக்கலில் சிக்கியுள்ள வெனிசுலா நாடும் சுமார் 38 மில்லியன் டாலர்களைச் செலுத்த வேண்டியுள்ளது.
உலக நாடுகளின் அமைதி மற்றும் வளர்ச்சிக்காக இயங்கும் ஒரு சர்வதேச அமைப்பு, நிதிப் பற்றாக்குறையால் முடங்கிப்போகும் சூழல் உருவாகியிருப்பது உலக அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
From peacekeeping forces food programs everything paralyzed red alert issued world nations due financial crisis