'12-ஆம் வகுப்பு படிக்கும் 78% மாணவர்கள் கணிதத்தில் தேர்ச்சி பெறுவதில்லை; சீனா மாணவர்கள் முன்னிலையில் இருக்கிறார்கள்'; விவேக் ராமசாமி கவலை..!
Vivek Ramasamy is concerned that 78 percentage of 12th grade students in the US are not passing math
அமெரிக்காவில் ஓஹியோ ஆளுநர் தேர்தலில் வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் அமெரிக்க பள்ளி மாணவர்கள் நிலை குறித்து புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளார். அதாவது அமெரிக்காவில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 78% பேர் கணிதத்தில் தேர்ச்சி பெறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான அமெரிக்க அரசு தரவுகளை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அமெரிக்காவில் 12-ஆம் வகுப்பு மாணவர்களில் 22% பேர் மட்டுமே கணிதத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது குறித்து விவேக் ராமசாமி கூறுகையில், 'சீன மாணவர்கள் அமெரிக்கர்களை விட நான்கு ஆண்டுகள் முன்னால் இருக்கின்றனர். இது உண்மை. இப்போது இதை சரிசெய்ய வேண்டியது மாநிலங்களின் பொறுப்பாகும்' என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க கல்வியின் தற்போதைய நிலை குறித்து விவேக் ராமசாமிக்கு பதிவுக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது மிகவும் முக்கியமான விஷயம் என்றும், இதற்கு தீர்வு காண, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அமெரிக்காவில் கல்வித் தரம் குறைந்து வருவது குறித்த விமர்சனங்கள் மற்றும் விவாதங்ககளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசு தலைமையிலான சீர்திருத்தங்களையும் ராமசாமி வலியுறுத்தி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

English Summary
Vivek Ramasamy is concerned that 78 percentage of 12th grade students in the US are not passing math