நாங்குநேரி கொடூரம்: தேர்தல் நேர அறுவடைக்கு சமூக மோதல்களை வளர்த்து விடுகிறதா திமுக? அதிமுக கடும் கண்டனம்!
nangunery murder case admk condemn to dmk mk stalin govt
அதிமுக விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "நாங்குநேரி அருகே பெரும்பட்டு கிராமத்தில் அரங்கேறியுள்ள கொடூரம் ஏற்க முடியாத பெருங்குற்றம்.
பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் அந்த கிராமத்திற்குள் புகுந்த 9 பேர் கொண்ட மர்மகும்பல், அங்குள்ள தேநீர் கடை மீது பெட்ரோல் குண்டு வீசி நடத்திய கொலைவெறித் தாக்குதலில் இருவர் பரிதாபமாக உயிரிழந்து, 6 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சட்டம் ஒழுங்கை ஒரு பொருட்டாக கருதாமல் விளம்பர ஆட்சி நடத்திய விடியா திமுக அரசின் அலட்சிய போக்கின் விளைவு தான் இந்த கொடூரக் கொலைகள்.
இது தங்கள் சமூகத்தைக் குறிவைத்து நடந்த தாக்குதல் எனவும், தங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் அச்சத்துடன் போராடி வருகின்றனர் அக்கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள்.
இதே நாங்குநேரி தொடங்கி, தென் மாவட்டங்களில் தொடர்ந்து நடக்கும் சமூக ரீதியான மோதல்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தது திமுக அரசு? வேடிக்கை மட்டும் தானே பார்த்துக்கொண்டு இருந்தது?
தொடர்ந்து இப்பகுதியை பதற்ற நிலையிலேயே வைத்திருக்க வேண்டுமென்பது தான் திமுக அரசின் எண்ணமா? தேர்தல் நேர அறுவடைக்கு சமூக மோதல்களை வளர்த்து விடுகிறதா திமுக? என்ற கேள்விகளும் சந்தேகங்களும் மக்களிடையே எழுகிறது.
வாய்கிழிய மேடைகளில் சமத்துவம் என்று பேசும் திமுக, தனது ஆட்சியில் சமூக மோதல்களைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது; கடும் கண்டனத்திற்குரியது.
பெரும்பட்டு தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவர் மீதும் மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறோம்" என்று தெரிவித்துள்ளது.
English Summary
nangunery murder case admk condemn to dmk mk stalin govt