அமித் ஷாவுடன் சந்திப்பு: சசிகலா விவகாரம் என்னவானது...? கூட்டணி குறித்து தெளிவு படுத்திய எடப்பாடி பழனிசாமி...! - Seithipunal
Seithipunal


டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணியின் தேர்தல் திட்டங்கள் குறித்து விரிவாக கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவிக்கையில்,"கூட்டணிக்குள் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்க உள்ளதாகவும், அமித் ஷாவை சந்தித்து தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து நேரடியாக ஆலோசனை நடத்தியதாகவும் தெரிவித்தார்.

தேர்தலை எவ்வாறு அணுக வேண்டும், எந்த வகையில் வியூகம் அமைக்க வேண்டும் என்பதையும் அவருடன் விவாதித்ததாக தெரிவித்தார்.

மேலும், புதிய அரசியல் கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்பு திறந்திருக்கிறது என்றும், தங்களது கூட்டணி ஒற்றுமையுடனும் உறுதியுடனும் செயல்பட்டு வருகிறது என்றும் குறிப்பிட்டார்.

இதற்கு மாறாக திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணியில்தான் குழப்ப நிலை காணப்படுகிறது எனவும் விமர்சித்தார்

அதே சமயம், வி.கே. சசிகலாவை கூட்டணியில் இணைப்பது குறித்து அமித் ஷாவுடன் எந்தவிதமான பேச்சும் நடத்தப்படவில்லை எனத் தெளிவுபடுத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Meeting Amit Shah What happened Sasikala issue Edappadi Palaniswami clarifies about alliance


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->