8 மாதங்களாக அனுமதி இல்லை… கீழடி அகழாய்வை தடுப்பது ஏன்...? - சு. வெங்கடேசன் கடும் கேள்வி
No permission 8 months Why Keezhadi excavation being stopped S Venkatesan tough question
சு. வெங்கடேசன் தனது ‘எக்ஸ்’ சமூக வலைத்தளப் பதிவில் மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார். கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட எட்டு முக்கிய அகழாய்வு மையங்களுக்கு கடந்த எட்டு மாதங்களாக அனுமதி வழங்கப்படாததைக் குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

“பருவமழை தொடங்கிவிட்டால் நிதி வீணாகும், ஆய்வுகள் பாதியில் முடங்கிவிடும் என்பது தெரிந்திருந்தும் ஏன் இத்தனை மௌனம்?” என அவர் வினவியுள்ளார்.
தமிழர்களின் தொன்மை வரலாற்றை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் முயற்சிகளைத் தடுக்கத் தொடர்ந்து செயல்படுகிறது நரேந்திர மோடி தலைமையிலான அரசு எனவும் குற்றம்சாட்டினார்.
மேலும், “எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கைவிடப்பட்ட கீழடி அகழாய்வு குழிகளிலிருந்தே எங்கள் தொன்மைத் தேடல் புதிய வேகத்தைப் பெற்றது.
அந்த ஆய்வுகள் உலக அரங்கிலும் தமிழர் நாகரிகத்தின் பெருமையை எடுத்துச் சென்றன; எகிப்து பிரமிடுகளுக்கு இணையாக நம் பாரம்பரியம் பேசப்பட்டது. இப்போது மீண்டும் தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் நோக்கத்துடன் வரலாற்றை தடுக்க முயல்வது நீடிக்காது; எங்களின் வரலாற்றுப் பேரெழுச்சி அந்தச் சிறுமைத்தனங்களை முறியடிக்கும் என அவர் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
No permission 8 months Why Keezhadi excavation being stopped S Venkatesan tough question