தெற்கு ரெயில்வேயில் புதிய மாற்றம்! எல்.எச்.பி பெட்டிகள் இணைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பாதுகாப்புடன் இயக்கம்
New change Southern Railway Express trains to operate safely with LHP coaches
தெற்கு ரெயில்வேயில் இயக்கப்படும் முக்கிய எக்ஸ்பிரஸ் ரெயில்களில், பழைய ரெயில் பெட்டிகள் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக எல்.எச்.பி (இலகுரக பெட்டிகள்) என்ற நவீன ரெயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய எல்.எச்.பி பெட்டிகள் தீயை விரைவாக பிடிக்காது, அதிர்வின்றி பாதுகாப்பாக பயணிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், ரெயிலின் வேகம் குறையாமல் சீரான மற்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்துகின்றன.

இதில் பல்வேறு முக்கிய எக்ஸ்பிரஸ் ரெயில்களில் இந்த எல்.எச்.பி பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக, எழும்பூர்- தென்மாவட்டங்கள் வழியாக செல்லும் கன்னியாகுமரி, நெல்லை, பொதிகை, பாண்டியன், முத்துநகர் போன்ற ரெயில்களில் இப்புத்தகங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
மேலும், (வண்டி எண் 16354/16353) நாகர்கோவில் -கச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரெயில்கள், வரும் டிசம்பர் 18-ம் தேதி முதல், மற்றும் கச்சிகுடா-நாகர்கோவில் வரும்மாலை ரெயில், டிசம்பர் 14-ம் தேதி முதல், எல்.எச்.பி பெட்டிகள் இணைத்து இயக்கப்பட இருக்கின்றன.
English Summary
New change Southern Railway Express trains to operate safely with LHP coaches