ரூ.19 லட்சம் செலவில் புதிய மின்மாற்றி..எதிர்க்கட்சித் தலைவர் சிவா இயக்கி வைப்பு!
A new transformer installed at a cost of Rs 19 lakh Opposition leader Siva inaugurates it
வில்லியனூர் ஒட்டாம்பாளையத்தில் ரூ.19 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின்மாற்றியை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா இயக்கி வைத்தார்.
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்றத் தொகுதி, புதுச்சேரி நகராட்சி, கொம்பாக்கம் வார்டுக்கு உட்பட்ட ஒட்டாம்பாளையம் கர்மவீரர் காமராஜர் ஆசிரியர் குடியிருப்பு பகுதி மக்களின் மின் தேவையை கருத்தில் கொண்டு, மின்துறை மூலம் ரூ. 19 லட்சம் செலவில் 315 கிலோ வாட் திறன் கொண்ட புதிய மின்மாற்றி 10–வது குறுக்குத் வீதியில் அமைக்கப்பட்டு, அதனை மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைக்கும் நேற்று மாலை 6.00 மணிக்கு நடைபெற்றது.
இதில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு, கூடுதல் திறன் கொண்ட புதிய மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், மின்துறை உதவிப் பொறியாளர் அருணகிரி, இளநிலைப் பொறியாளர் அரவிந்தன், ஊழியர்கள் சுப்பிரமணி, வீரப்பன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் ராமலிங்கம், ராதாகிருஷ்ணன், ராஜசேகர், கிருஷ்ணகுமார், ரகுபதி, சிவக்குமார், செல்லப்பா, கலாதரன், திருஞானசம்பந்தம், சரவணன், பிரபாகரன், சாமிராஜ், தனபால், ஜெயப்பிரகாஷ், ஜெய்கணேஷ், குமார், சுப்பிரமணியன், செல்வராஜ், லோகநாதன், ஆறுமுகம், ஆரோக்கியதாஸ், புருஷோத்தமன், சிவராஜ் லிங்கம் மற்றும் திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், தொகுதி துணைச் செயலாளர் ஜெகன்மோகன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் தேசிகன், ஆதிதிராவிடர் அணி துணைத் தலைவர் கதிரவன், கிளைக் கழக நிர்வாகிகள் வேலு படையாட்சி, பிஆர்டிசி பாஸ்கர் , ஜனா,சுரேஷ், வரதன், வரதராஜ், முருகையன், கார்த்திகேயன், பாலமுருகன், முருகன், வேல்முருகன், சேகர், வெங்கடேசன், செல்வேந்திரன், கனகராஜ், அனீஷ், திவான், ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
English Summary
A new transformer installed at a cost of Rs 19 lakh Opposition leader Siva inaugurates it