கோவையில் இருந்து இலங்கைக்கு விரைவில் நேரடி விமான சேவை..அதிகாரிகள் தகவல்!
Direct flights from Coimbatore to Sri Lanka soon Officials inform
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா துறை அதிகாரிகள் கோவையில் தெரிவித்துள்ளனர்.
கோவையில் இலங்கை சுற்றுலா துறை தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பு அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது..இதில் சுற்றுலா தொடர்பான துணை அமைச்சர், பேராசிரியர் ருவான் ரணசிங்கே, மற்றும் சுற்றுலா துறை தொடர்பான அதிகாரிகள் செய்தியாளர்களிடம் பேசினர்..
இந்தியாவிலிருந்து இதுவரை இல்லாத அளவில் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாகவும்,இந்தியா தொடர்ந்து இலங்கையின் முதன்மை சுற்றுலா சந்தை மையமாக திகழ்வதாக தெரிவித்தனர்..இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு விசா இல்லா நுழைவு வழங்கப்பட்டுள்ளதாகவும்,இந்திய அளவில் இலங்கைக்கு தமிழகத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் அதிகரித்து வருவதாக கூறினர்..
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், குறைந்த பயண நேரத்துடன் 9 இந்திய நகரங்களை இலங்கையுடன் இணைக்கும் 88 விமான சேவைகளை இயக்குவதாகவும், விரைவில் கோவை விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை துவங்க உள்ளதாக கூறினர்..
மதுரை, கோயம்புத்தூர் மற்றும் சென்னை நகரங்களில் நடைபெறும் எங்கள் ரோட்சோக்கள் மூலம், இந்த உறவுகளை வலுப்படுத்தி, இலங்கையை சுற்றுலா, MICE மற்றும் ஆன்மீக பயணங்களுக்கு வருட முழுவதும் முன்னுரிமை பெற்ற தலமாக வெளிப்படுத்துவதே எங்கள் நோக்கம்.என தெரிவித்தனர்..நிகழ்ச்சியில் இலங்கையின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது..
English Summary
Direct flights from Coimbatore to Sri Lanka soon Officials inform