2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றிபெரும்..முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் நம்பிக்கை! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மத்திய மாவட்டம் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி திருவள்ளூர் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
   
திருவள்ளூர் மத்திய மாவட்டம் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி திருவள்ளூர் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் ஈக்காடு பகுதியில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் டி பூங்கவன் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளர் ஆன பா பென்ஜமின், தகவல் தொழில்நுட்ப பிரிவு வைகுந்தராஜன் கேசவ சௌந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். 

மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணத்தை புரட்சித் தமிழர் எடப்பாடி தமிழக முழுவதும் மேற்கொண்டு தொகுதி வாரியாக பிரச்சனைகளை பேசி வருகிறார். திமுக அரசு ஆட்சி வருவதற்கு முன்னர் தேர்தல் அறிக்கையில் தெரிவித்த எதையும் நான்கரை ஆண்டுகள் கடந்தும் இதுவரை எதையும் செய்யவில்லை என்பதை பொதுமக்களிடம் எடுத்து சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட திட்டங்கள் மீண்டும் தொடர 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க அனைவரும் பாடுபட வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் பா. பெஞ்சமின் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ மணிமாறன், முன்னாள் எம்பி ஜெகநாதன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் திருநாவுக்கரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMK will achieve a massive victory in the 2026 assembly elections Former Minister Benjamin's confidence


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->