மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கிகள்.. மாவட்ட ஆட்சியர் பிரதாப் வழங்கினார்! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி கூட்டரங்கில் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கிகளை  மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வழங்கினார்.

திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி கூட்டரங்கில் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கி வழங்கும் விழா நடைபெற்றது.விழாவில் 2025-26 ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையில் திருவள்ளூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வழங்கி, மாணவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் ஏற்படுத்தும் வகையில் உரையாற்றி மருத்துவப் படிப்பை அறிந்து புரிந்து படித்து வாழ்வில் சிறந்து விளங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

முன்னதாக மூத்த மாணவர்கள் அனைவரும் ராக்கிங் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் முன்னாள் மருத்துவக் கல்வி இயக்குநர் ஆர்.சாந்தி மலர், அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜே.ரேவதி, துணை முதல்வர் என்.திலகவதி, மருத்துவ கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு, மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்துக்கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

White coats for medical students District Collector Prathap distributed them


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->