ஆத்தூரில் ரேஷன் அரிசி கடத்தல்: ரூ.15,000 லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் உள்பட 04 போலீசார் கைது..!
04 policemen including an inspector arrested for accepting a bribe of Rs 15000 to help smuggle ration rice
சேலம் மாவட்டம் ஆத்தூரில் ரேஷன் அரிசி கடத்தலை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக 15,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, இன்ஸ்பெக்டர் உள்பட நான்கு போலீசாரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆத்தூரை சேர்ந்த விவசாயி சக்திவேல் என்பவர் இரு மாதங்களுக்கு முன், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதால், சேலம் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் ஜாமினில் வந்தவர், அரிசி கடத்தலை கண்டுகொள்ளாமல் இருக்க, என்ன செய்ய வேண்டும் என குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் 'மாதந்தோறும், 15,000 ரூபாய் லஞ்சம் வேண்டும்' என கூறியுள்ளனர்.

ஆனால், பணம் கொடுக்க விரும்பாத சக்திவேல், சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் கொடுத்துள்ளார். அத்துடன், அவர்கள் வழிகாட்டுதல்படி ரசாயன பவுடர் தடவப்பட்ட, 15,000 ரூபாயை, கொண்டலாம்பட்டியில் வைத்து ஏட்டு ராஜலட்சுமியிடம், 36, நேற்று மதியம் கொடுத்துள்ளார்.
அப்போது மறைந்திருந்து பார்த்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கையும் களவுமாக அவரை கைது செய்துள்ளனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியபோது, இன்ஸ்பெக்டர் ராமராஜன் (50), எஸ்.ஐ.,க்கள் சரவணன் (37), ராமகிருஷ்ணன் (38), ஆகியோருக்கும் தொடர்புள்ளமை தெரியவந்த நிலையில் அவர்களையும் கைது லஞ்ச ஒழிப்பு போலீசார் செய்துள்ளனர்.
English Summary
04 policemen including an inspector arrested for accepting a bribe of Rs 15000 to help smuggle ration rice