தஞ்சையில் கள்ளக்காதலனுடன் சென்ற மனைவி! 3 குழந்தைகளைக் கொன்ற தந்தை கைது!
thanjai illegal affair case 3 child death
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் மதுக்கூர் அருகே கோபாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் (38) என்ற நபர், தனது மூன்று குழந்தைகளை கொன்ற கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹோட்டலில் சர்வராக வேலை செய்த வினோத்குமார், மனைவி நித்யா (35) உடன் வசித்து வந்தார். இவர்களுக்கு ஓவியா (12), கீர்த்தி (8), ஈஸ்வரன் (5) என்ற மூன்று பிள்ளைகள் இருந்தனர்.
சில மாதங்களுக்கு முன்பு, நித்யாவுக்கு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த ஒருவருடன் சமூக வலைதளத்தின் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பின்னர், தனது கணவரையும் குழந்தைகளையும் விட்டு அந்த நபருடன் சென்றுவிட்டார்.
மனைவியின் செயலில் மன உளைச்சலுக்குள்ளான வினோத்குமார் மதுவுக்கு அடிமையாகி, குழந்தைகளிடம் அடிக்கடி கோபம் காட்டியதாக கூறப்படுகிறது.
இன்று சுமார் 7 மணி அளவில் மதுபோதையில் வீடு திரும்பிய அவர், இரண்டு மகள்களையும் தண்ணீர் எடுத்து வரச் சொல்லி வெளியே அனுப்பினார். பின்னர் இளைய மகன் ஈஸ்வரனை தழுவிக் கொண்டிருந்தபோது திடீரென அரிவாளால் கழுத்தை அறுத்து கொன்றார். பின்னர் வீட்டுக்கு வந்த இரண்டு மகள்களையும் ஒன்றன்பின் ஒன்றாகக் கொலை செய்தார்.
பின்னர் தன்னுடைய செயலை உணர்ந்த வினோத்குமார், நேராக மதுக்கூர் போலீஸ் நிலையத்துக்குச் சென்று சரணடைந்தார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை டி.எஸ்.பி. ரவிசந்திரன் தலைமையில் மதுக்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தஞ்சாவூர் முழுவதும் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
thanjai illegal affair case 3 child death