திமுகவிற்கு ஜால்ரா போட்டா தான் காங்கிரசில் பதவி... எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்!
ADMK EPS DMK Congress alliance
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் நடைபெற்ற “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” பிரச்சாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதில், “பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தது முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் உண்டாக்கியுள்ளது. எங்கள் கட்சி யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்கும். அதனால் திமுக பதட்டப்பட தேவையில்லை. வரும் தேர்தலில் அதிமுக பெரும்பான்மையாக வென்று ஆட்சி அமைக்கும்” என்றார்.
அவர் மேலும், “திமுக கூட்டணியில் பல கட்சிகள் இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் ஓட்டுப்போடுவது கூட்டணி கட்சிகள் அல்ல, மக்கள் தான். மக்கள் அதிமுக ஆட்சியை மீண்டும் விரும்புகிறார்கள். அதனால் ஆட்சிக்கு வரும் கட்சி அதிமுக தான்” என்றார்.
காங்கிரஸ் கட்சியை குறிவைத்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “நூற்றாண்டு விழா கொண்டாடிய காங்கிரஸ் கட்சியில் இப்போது விசுவாசிகளுக்கு இடமில்லை. அந்தக் கட்சியில் திமுகவுக்கு யார் ஜால்ரா போடுகிறார்களோ, அவர்களே தலைவராக நியமிக்கப்படுகிறார்கள். மாநில தலைவராக பல கட்சிகளில் சுற்றிய ஒருவரை வைத்துள்ளனர்” என்று குற்றம்சாட்டினார்.
அவர் தொடர்ந்தும், “மக்கள் தான் நம்முடைய எஜமானர்கள். அவர்கள் யாரை நம்புகிறார்கள் என்பது தெளிவாக தெரியும். மக்கள் நம்பிக்கை அதிமுக மீதே உள்ளது. அதனால் வரும் தேர்தலில் அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி” என உறுதியாக தெரிவித்துள்ளார்.
English Summary
ADMK EPS DMK Congress alliance