ஆந்திராவில் தகவல் தொழிநுட்ப திட்டம்: ரூ.88 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் கூகுள் நிறுவனம்..!
Google to invest Rs 88 thousand crores in Andhra Pradesh
தகவல் மையம் மற்றும் செயற்கை நுண்ணறிவு திட்டங்களுக்காக கூகுள் நிறுவனத்தில், ரூ.88 ஆயிரம் கோடி முதலீடு செய்யவுள்ளதாக ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயிடு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: ஆந்திராவில் கூகுள் தகவல் மையம் மற்றும் செயற்கை நுண்ணறிவு திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நிதி சீர்திருத்தம் செய்யப்பட்ட பிறகு, இந்தத் திட்டங்களுக்காக விசாகப்பட்டினத்தில் அடுத்த 03 ஆண்டுகளில் ஒரேயடியாக 88 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், விசாகப்பட்டினத்தின் தார்லுவாடா, அடவிவரம் மற்றும் ராம்பில்லி ஆகிய இடங்களில் இந்த மையங்கள் அமைய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வரும் 2047 க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறிவிடும். அதில் முதன்மையான மாநிலமாக ஆந்திரா இருக்கும் என்று கூறியுள்ளார்.
English Summary
Google to invest Rs 88 thousand crores in Andhra Pradesh