அணு கட்டுப்பாட்டு கவசம் கிழிந்தது: அமெரிக்கா-ரஷியா மீண்டும் ஆயுதப் போட்டிக்கா....?
nuclear arms control agreement torn up US and Russia heading another arms race
2010-ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் ரஷியா இடையே அணு ஆயுதங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் கையெழுத்தான “நியூ ஸ்டார்ட்” ஒப்பந்தம், உலகளாவிய பாதுகாப்புக்கு முக்கியக் கவசமாக இருந்து வந்தது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் இரு நாடுகளும் தலா 1,550 அணு ஆயுதங்களை மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்ற கடுமையான வரம்பு விதிக்கப்பட்டது.

2021-ல் இது மேலும் ஐந்து ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டிருந்தாலும், தற்போது அந்த ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக காலாவதியாகி விட்டது. ஒப்பந்தத்தை மீண்டும் நீட்டிக்க ரஷியா விருப்பம் தெரிவித்தபோதிலும், அமெரிக்க அதிபர் டிரம்ப் அதற்கு சம்மதிக்காததால் இரு அணு வல்லரசுகளுக்கிடையேயான பாதுகாப்பு சமநிலை கேள்விக்குறியாகியுள்ளது.
இதுகுறித்து ரஷிய அதிபர் புதினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், “இந்த ஒப்பந்தம் முடிவடைவது கவலைக்கிடமானது; இருப்பினும் ரஷியா மிகுந்த பொறுப்புடன் செயல்படும், ஆனால் எங்களின் தேசிய நலன்களே முதன்மை” என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் டிரம்ப் தனது ‘ட்ரூத்’ சமூக வலைதளத்தில், “நீண்ட காலத்துக்கு நிலைத்திருக்கும், மேம்பட்ட மற்றும் நவீன ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும்” என்று பதிவு செய்து புதிய பேச்சுவார்த்தைக்கு சைகை காட்டியுள்ளார்.
எனினும், காலாவதியான ஒப்பந்த விதிகளை இடைக்காலமாகப் பின்பற்றுவார்களா என்ற கேள்விக்கு வெள்ளை மாளிகை “அப்படியான தகவல் இல்லை” என்று பதிலளித்துள்ளது. இதனால் உலக பாதுகாப்பு சூழலில் புதிய பதற்றம் உருவாகி, அணு ஆயுத போட்டி மீண்டும் தலைதூக்குமோ என்ற அச்சம் வலுத்துள்ளது.
English Summary
nuclear arms control agreement torn up US and Russia heading another arms race