திருப்பதி லட்டு தயாரிக்கும் நெய்யில் பாத்ரூம் சுத்தம் செய்யும் கெமிக்கல் பயன்பாடு; சந்திரபாபு நாயுடு அதிர்ச்சி தகவல்..! - Seithipunal
Seithipunal


திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட நெய்யின் தரம் குறித்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மீண்டும் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். இன்று கர்னூல் மாவட்டம் களுகோட்லாவில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிம் போது அவர் கூறியாதவது;

முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சிக் காலத்தில், திருப்பதி லட்டு தயாரிப்பதற்காகக் கொள்முதல் செய்யப்பட்ட நெய், பாத்ரூம் சுத்தம் செய்யப் பயன்படும் ரசாயனங்களை கொண்டு தயாரிக்கப்பட்டதாக பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.

லட்டு தயாரிக்கப்பட்ட நெய் மாதிரிகளைப் பரிசோதனை செய்தபோது, அதில் விலங்குகளின் கொழுப்பு, மீன் எண்ணெய் மற்றும் சோயா எண்ணெய் போன்றவை கலந்திருப்பதாக ஏற்கனவே தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், ரசாயனக் கலப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, எழுமைலையான் கோவில் திருப்பதியில் தயாரிக்கப்படும், லட்டுவின் தரத்தைச் சீரழித்து, கோடிக்கணக்கான இந்துக்களின் மத உணர்வுகளை முந்தைய அரசு புண்படுத்திவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.அத்துடன், இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், இனி வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்கத் திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆந்திர முதல்வர் கூறியுள்ளார். முன்னதாக நேற்று இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஒரு நபர் ஆணையத்தை சந்திரபாபு நாயுடு அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chandrababu Naidu alleged that a chemical used for cleaning bathrooms was used in the ghee for making Tirupati laddus


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->