கர்நாடகாவில் முதல்வர் மாற்றமா..? காங்கிரஸ் மேலிடம் சொல்வது என்ன..? சித்தராமையா மகன் தகவல்..!
Siddaramaiahs son provides information regarding a change in the Chief Minister of Karnataka
கர்நாடக மாநிலத்தில் முதல்வராக சித்தராமையா இருந்து வருகிறார். மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தபோது சித்தரமையா இரண்டரை ஆண்டுகள், டி.கே. சிவக்குமார் இரண்டரை ஆண்டுகள் முதல்வராக இருப்பார்கள் என பேசப்பட்டது.
அதன்படி, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் சித்தராமையாவின் இரண்டரை ஆண்டு பதவிக்காலம் முடிவடைந்தது. இதனால் டி.கே. சிவக்குமார் புதிய முதல்வராக பதவி ஏற்பார் என்றும், கர்நாடக மாநில அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என்று காங்கிரஸ் வட்டாரங்களில் கூறப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் கர்நாடகாவில் முதலமைச்சர் மாற்றம் குறித்த விவகாரத்தில், மாற்றத்திற்கான கோரிக்கைகளை உயர் தலைமை ஏற்கவில்லை என்றும், மாற்றம் கிடையாது என தெளிவான சிக்னல் கிடைத்து விட்டதாக சித்தராமையா மகனும், கர்நாடக மாநில மேலவை எம்.எல்.ஏ-வுமான யதீந்திரா சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக யதீந்திரா மேலும்,கூறியுள்ளதாவது: ''என்னை பொறுத்தவரையில், உயர் தலைமை இது தொடர்பாக வெளிப்படையாக சொல்லியிருக்காது. ஆனால், எந்தவொரு தலைமைத்துவம் மாற்றமும் இருக்காது என தெளிவான சிக்னல் கொடுத்துள்ளது.'' என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சித்தராமையா ஐந்து வருடம் முதல்வராக பணியாற்றுவார் என நம்புவதாகவும், இது தீர்க்கப்பட்ட விசயம். இப்போது அப்படித்தான் தெரிகிறது என்று கூறியுள்ளார். சித்தராமையாவை நீக்க வேண்டும் என்றோ அல்லது நீக்கப்படுவார் என்றோ யாரும் கூறவில்லை என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதேநேரத்தில், 05 ஆண்டுகள் முதலமைச்சர் பதவியை நிறைவு செய்வேன் என சித்தராமையா தொடர்ந்து பேசி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Siddaramaiahs son provides information regarding a change in the Chief Minister of Karnataka