தமிழகத்தில் கனமழை அலர்ட்! 14 மாவட்டங்களில் இன்று மின்னல் இடியுடன் மழை!- கிருஷ்ணகிரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
Heavy rain alert Tamil Nadu Rain with thunder and lightning in 14 districts today Orange alert for Krishnagiri
தென்னிந்திய வானிலையை திசைமாற்றும் வகையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தீவிரமடைந்துள்ளது. இதன் தாக்கத்தால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட புதிய எச்சரிக்கையில், திருப்பத்தூர், நாமக்கல்,தேனி, திருவண்ணாமலை,நீலகிரி,மதுரை, திண்டுக்கல், தென்காசி, கோவை, ஈரோடு, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு “மிக கனமழை” என்ற ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வானம் இருண்டு மேகங்கள் திரளும் நிலையில், மழை ரசிகர்களுக்கு இன்று வானிலை நிச்சயம் ஒரு சுவாரசியமான திருப்பமாக இருக்கிறது.
English Summary
Heavy rain alert Tamil Nadu Rain with thunder and lightning in 14 districts today Orange alert for Krishnagiri