மீண்டும் அதிர்ச்சி! ராமேசுவரம் 30 தமிழ்மீனவர்கள் கைது, படகுகள் பறிமுதல்!- நாளை முதல் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டத்தின் ராமேசுவரத்தைச் சேர்ந்த 30 தமிழ்மீனவர்கள், நேற்று முன்தினம் இரவு தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான கடல் எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென இலங்கை கடற்படை கப்பல்கள் விரைந்து வந்து முற்றுகையிட்டன.

மேலும், “இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக” குற்றம் சாட்டி, கடற்படை வீரர்கள் 30 மீனவர்களையும் கைது செய்து, அவர்களின் மீன்பிடிப் படகுகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் பின்னர் இலங்கையின் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.அங்கு விசாரணை நடத்திய நீதிமன்றம், அனைத்து 30 பேருக்கும் வரும் 23ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிட்டது.

இதையடுத்து, அவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், தங்கள் சக மீனவர்களை விடுவிக்க கோரி, ராமேசுவரம் மீனவர் சங்கங்கள் அவசரக் கூட்டம் நடத்தியுள்ளன.

இதில், நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் மற்றும் பெரிய அளவிலான ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. “தமிழ்மீனவர்கள் குற்றமில்லாமல் சிறையில், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!” எனக் கோரியுள்ள அவர்கள், மத்திய அரசையும், தமிழக அரசையும் தலையிடுமாறு வலியுறுத்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

30 Tamil fishermen arrested Rameswaram boats seized Fishermen to go on indefinite strike from tomorrow


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->