தியேட்டரில் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய கீர்த்தி சனோன்… பாதுகாப்பாக கட்டிப்பிடித்து அழைத்துச் சென்ற தனுஷ்! - Seithipunal
Seithipunal


நடிகர் தனுஷ் – கீர்த்தி சனோன் இணைந்து நடித்த “தேரே இஷ்க் மே” இந்தி மற்றும் தமிழில் வெளியாகி, சிறந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. ஆனந்த் எல். ராய் இயக்கிய இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்திருப்பது ரசிகர்களிடம் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக ஹிந்தி பாக்ஸ் ஆபீஸில் படம் பட்டையைக் கிளப்பி வருகிறது.

படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து, தனுஷ் மற்றும் கீர்த்தி சனோன் இந்தியா முழுவதும் உள்ள பல திரையரங்குகளுக்கு சர்ப்ரைஸ் விஜிட் செய்து ரசிகர்களை சந்தித்து வருகிறார்கள். அந்த வரிசையில், மும்பையின் பிரபலமான Gaiety Galaxy திரையரங்கில் அவர்கள் தோன்றியபோது, ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

பவுன்சர்கள் இருந்தபோதிலும், பெரும் உற்சாகத்தில் இருந்த ரசிகர்கள் கூட்டம் திடீரென மிகவும் நெருக்கமாக சூழ்ந்தபோது, நடிகை கீர்த்தி சனோன் சிரமப்படுவதை கவனித்த தனுஷ், உடனே கீர்த்தியை பாதுகாப்பாக கட்டிப்பிடித்து, கூட்டத்திலிருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றார்.

இந்த காட்சியை ஒருவரால் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வீடியோவில் கீர்த்தி சற்று பயந்த காட்சியையும், தனுஷ் அமைதியாக அவரை பாதுகாக்கும் விதத்தையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

என்னமோ அக்கறையா கவனிச்சாரே!”, “ஜென்டில்மேன் தனுஷ்!”, “இந்தியா லெவல் ஸ்டார் ஆனாலும் எளிமை அதே!” போன்ற கமென்ட்கள் திரண்டு வருகின்றன.

தமிழில் படம் ஓரளவுக்கு வரவேற்பு பெற்றிருக்கையிலேயே, இந்தியில் கிடைக்கும் அபாரமான வெற்றி தனுஷின் பாலிவுட் மார்க்கெட்டில் மீண்டும் ஒரு பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Keerthy Sanon got stuck in a crowd of fans at the theater Dhanush hugged her and took her away safely


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->