“அமித் ஷா ஆலோசனையில்தான் செங்கோட்டையன் த.வெ.க.வில் சேர்ந்தார்” – த.வெ.க. கட்சி அல்ல.. பாஜகவின் இன்னொரு கிளை தான்- உதயநிதி ஸ்டாலின்!
Sengottaiyan joined the TRP on the advice of Amit Shah TRP is not a party.. it is another branch of the BJP Udhayanidhi Stalin
ஈரோடு மாவட்டம் எழுமாத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும் போது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் த.வெ.க. சேர்வும், அதிமுகவின் தற்போதைய நிலையும் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
திடீர் அரசியல் மாற்றத்தை சுட்டிக்காட்டிய அவர், “செங்கோட்டையன் திடீரென்று த.வெ.க.வில் சேரவில்லை; அமித் ஷாவின் ஆலோசனையின் பேரில் தான் இந்த மாற்றம் நடந்தது. அவர் கட்சி மாறவில்லை—அதே கட்சியின் இன்னொரு கிளைக்குச் சென்றுள்ளார். இதன் மூலம் த.வெ.க. என்பது முழுமையாக பா.ஜ.க.வின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது என்பது வெளிப்படுகிறது” என்று கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த உதயநிதி,“திராவிட சிந்தனையை மறந்தவர் தான் எடப்பாடி. திராவிடம் பற்றி என்னிடம் கேட்காதீர்கள் என்றவர், அண்ணாவையும், எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் மறந்து விட்டார். இப்போது அவருடைய மனதில் இருப்பது ஒரே ஒருவர்—அமித் ஷா தான்” என்று தாக்குதலான கருத்து தெரிவித்தார்.
அதிமுகவின் அரசியல் நிலைப்பாடுகள் பா.ஜ.க.வின் ஈடுபாட்டில் நடைபெறுவதாக குற்றம் சாட்டிய அவர்,“அதிமுக தலைவர்கள் யார் சிறந்த அடிமை என்பதை நிரூபிக்கப் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். எந்தக் கட்சியில் சேர வேண்டுமென்றாலும் பா.ஜ.க.விடம் அனுமதி பெற்றே செல்கின்றனர். தமிழ்நாட்டில் பல கட்சிகளின் ‘ஹெட்ஆபிஸ்’ என்பது இப்போது அமித் ஷாவின் வீடு ஆகிவிட்டது” எனவும் சாடினார்.உதயநிதியின் இக்கருத்துகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளன.
English Summary
Sengottaiyan joined the TRP on the advice of Amit Shah TRP is not a party.. it is another branch of the BJP Udhayanidhi Stalin