“ரஹாவின் அப்பாவை காணவில்லை… டி.என்.ஏ. டெஸ்டுக்கு பயந்து ஓடிவிட்டார்!” – ஜாய் கிரிசில்டா பதிவு! - Seithipunal
Seithipunal


மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிரிசில்டா விவகாரம் தினமும் புதிய திருப்பங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறது. ஏற்கனவே தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிசில்டா அளித்த புகார் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் நீதிமன்றத்தையும், சமூக வலைதளங்களையும் சூடேற்றி வருகிறது.

சமீபத்தில், ஜாய் கிரிசில்டாவின் சமூக வலைதள பதிவுகளால் தங்களது தொழிலை பாதித்துவிட்டதாக கூறிய மாதம்பட்டி பாகசாலா தரப்பு, அந்த பதிவுகளை நீக்கவும், அவரின் கருத்துரைகளை தடுக்கவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. ஆனால் விசாரணை முடிவில், ஜாய் Գրிசில்டாவின் தரப்பை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தடை கோரும் மனுவை தள்ளுபடி செய்தார். இதனால், மாதம்பட்டி ரங்கராஜுக்கு சட்டரீதியாக மேலும் ஒரு பின்னடைவு நேர்ந்துள்ளது.

இந்த தீர்ப்புக்கு பின் உற்சாகம் அடைந்த ஜாய் கிரிசில்டா தொடர்ச்சியாக பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அதில் மிகவும் கவனத்தை ஈர்த்தது அவரது X (Twitter) பதிவே:

“ரஹா ரங்கராஜ் -வின் அப்பா மாதம்பட்டி ரங்கராஜை ஒரு மாதமாக காணவில்லை. DNA test க்கு தலைமறைவாக உள்ளார். இவரை event-ல் பார்த்தால் உடனே DM செய்யவும். குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்குமாம்… அதான் ஓளிந்து ஓடுகிறார்.”

அதோடு, அவர் தனது பதிவில் ரங்கராஜ் சட்டரீதியான செயல்களை எதிர்கொள்ளாமல் ஓடிப்போகிறார் என்றும், பணம் கொடுத்து டி.என்.ஏ டெஸ்டை மாற்ற முயற்சிக்கிறாரோ என சந்தேகத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ஜாய் கிரிசில்டாவின் கடும் வார்த்தைகள்:
“உங்கள் மனசாட்சியையும் கடவுளையும் ஏமாற்ற முடியாது. ‘அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்’. நீங்கள் செய்த செயல்களின் பலனை நிச்சயம் அனுபவிக்க வேண்டிய நேரம் வரும்.”என்று மன வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு தற்போது இணையத்தில் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. ரங்கராஜ் தரப்பில் இதுவரை எவ்வித பதிலும் வெளியாகவில்லை. ஆனால் ஜாய் கிரிசில்டாவின் ஒவ்வொரு பதிவும் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி வரும் நிலையில், இந்த விவகாரம் இன்னும் எந்த திசைக்கு மாறப்போகிறது என்பது ஆர்வமுடனும் பதட்டத்துடனும் கவனிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Raha father is missing He ran away in fear of the DNA test Joy Crisilda posts


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->