'விஜய்க்கு கஷ்டப்படுவது பிடிக்காது; அவரை எதிர்த்துப் போட்டியிடுவேன்'; விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வகுமார் சவால்..! - Seithipunal
Seithipunal


தவெக தலைவர் விஜய்யின் முன்னாள் மேலாளரும், திமுக வர்த்தக அணி மாநில துணை செயலாளருமான பி.டி.செல்வகுமார் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான திமுக சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனு வழங்கியுள்ளார்.

அப்போது திமுக தலைமை உத்தரவிட்டால் விஜய்யை எதிர்த்து போட்டியிடுவேன் அவர் சவால் விடுத்துள்ளார். 
மேலும் செய்தியாளர்களை சந்தித்த அவர், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து தனது விருப்ப மனுவை கொடுத்துள்ளதாக தெரிவித்தார். 

அத்துடன், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் ஏராளமான நற்பணிகளை தான் செய்துள்ளதால், அங்கு மக்களின் ஆதரவு அதிக அளவில் உள்ளதாகவும், வாய்ப்பு அளித்தால் தான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தவெக தலைவர் விஜய் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர் என்பதால், தோல்வியை ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று தெரிவித்துள்ளதோடு, விஜய் 15 நாட்களுக்கு ஒருமுறைதான் வெளியே வருகிறார் என்று விமர்சித்துள்ளார்.

அதிலும் விஜய் தனி விமானத்தில் வந்து, கேரவனில் அமர்ந்துகொண்டு, 10 நிமிடங்கள் மட்டும் மக்களை சந்தித்து பேசுவதை மட்டுமே செய்கிறார் எனவும் பி.டி.செல்வகுமார் கடுமையாக சாடியுள்ளார்.

தேர்தல் களம் காண வேண்டுமென்றால், மக்களை நாள்தோறும் நேரடியாக சந்திக்க வேண்டும் என்றும், அவர்களின் குறைகளைக் கேட்டு அறிந்து, மக்களோடு மக்களாக இருக்க வேண்டும், கடினமான உழைப்பை கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஆனால், விஜய்க்கு கஷ்டப்படுவது பிடிக்காது, சொகுசாக இருக்க மட்டுமே தெரியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PD Selvakumar says he will contest against TVK Vijay if DMK leadership orders


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->