ஆப்கானிஸ்தானில் 5.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; வீதிகளில் தஞ்சம் புகுந்த மக்கள்..! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தானில் 5.8 ரிக்டர் அளவு கோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு வடகிழக்கே சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாஞ்ச்ஷீர் மாகாணத்தை மையமாகக் கொண்டு 90 கிலோமீட்டர் ஆழத்தில் உணரப்பட்டுள்ளது. 

உள்ளூர் நேரப்படி இன்று மாலை 05:40 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் அதிர்வுகள் காபூல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நங்கர்ஹார், பமியான், வர்தக் போன்ற மாகாணங்களில் உணரப்பட்டுள்ளன.

தலைநகர் காபூலின் சில பகுதிகளில் நிலநடுக்கத்தை தொடர்ந்து மின்சாரம் தடைப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேநேரம் இந்த நிலநடுக்கத்தால் இதுவரை உயிரிழப்புகளோ அல்லது பெரிய அளவிலான சேதங்களோ ஏற்பட்டதாக செய்திகள் வெளியாவில்லை. 

இதற்கு முன்னதாக, கடந்த 2025 ஆகஸ்ட்-இல் அந்நாட்டில் ஏற்பட்ட 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 2,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Powerful earthquake hits Afghanistan


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->