33 சிறுவர்களை கடத்தி பாலியல் செயல்களில் ஈடுபடுத்தி வீடியோ எடுத்து விற்ற தம்பதி; மரண தண்டனை விதித்துள்ள நீதிமன்றம்..! - Seithipunal
Seithipunal


உத்தரப் பிரதேசத்தில் கடந்த 2010 முதல் 2020 வரையிலான 10 வருட காலகட்டத்தில் பல சிறுவர்களை கடத்தி பாலியல் செயல்களில் ஈடுபடுத்தி அதை படம் பிடித்து டார்க் வெப் உள்ளிட்ட சட்டவிரோத இணயதளங்களுக்கு  ராம் பவன் -துர்காவதி தம்பதி விற்று வந்துள்ளனர். இதில் ராம் பவன் நீர்ப்பாசன துறையில் இளநிலை பொறியாளராக பணியாற்றிய வந்தவர்.

இவர்கள்  உ.பி-இன் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 03 வயது முதல் 16 வயது வரையிலான 33 சிறுவர்களை கடத்தி வந்து துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளனர். குறிப்பாக, கணவன் ராம் பவன், குழந்தைகளுக்கு ஆன்லைன் வீடியோ கேம்கள், பணம் மற்றும் பரிசுகள் கொடுத்து அவர்களை ஆசை காட்டி தனது வலைக்குள் வீழ்த்தியுள்ளார்.

இவ்வாறு கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டுள்ள சில சிறுவர்களின் பாலியல் உறுப்புகளில் பலத்த காயங்கள், கண் கோளாறுகள் இருந்துள்ளன. அத்துடன் இவர்கள் இன்னும் உளவியல் ரீதியான அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது.

இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட சிறார் பாலியல் வீடியோக்களை சிபிஐ அதிகாரிகள் கண்காணித்து வந்த நிலையில், ராம் பவன், துர்காவதி தம்பதி சிக்கியுள்ளனர்.

இவர்கள் சிறுவர்களின் இந்தப் பாலியல் வீடியோக்கள் மற்றும் படங்ககளை என்கிரிப்ட் செய்யப்பட்ட தளங்கள் மூலம் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு விற்கப்பட்டது உறுதியாகியுள்ளது. கடந்த 2020 அக்டோபரில் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த சிபிஐ, அடுத்த சில மாதங்களிலேயே குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது.

அதன்படி, குறித்த தம்பதி மீது போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடந்த 06 ஆண்டுகளாக பாண்டா போக்சோ நீதிமன்றத்தில் விசார விசாரணை நடந்து வந்தது. இதன்போது 33 சிறுவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு, வீடியோ உள்ளிட்ட ஆதரங்கள் சிபிஐ தரப்பில் சமர்பிக்கப்பட்டன.

இந்நிலையில் இந்த வழக்கில் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதை அரிதினும் அரிதான வழக்கு என்று கூறிய நீதிமன்றம், ராம் பவன் மற்றும் துர்காதேவி இருவருக்கும் மரண தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் மாநில மற்றும் மத்திய அரசுகள் தலா ரூ. 10 லட்சம் வீதம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க நீண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், தம்பதியின் வீட்டில் இருந்து சிபிஐ பறிமுதல் செய்த ரொக்கப் பணத்தையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமமாகப் பிரித்து வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Court sentences couple to death for sexually abusing 33 children filming and selling videos


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->