'டிரம்புக்கு எந்த ஒரு அதிகாரமும் கிடையாது; அவர் விதித்த வரிகள் செல்லாது': அமெரிக்க உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!
US Supreme Court rules that Trumps tariffs are invalid
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாட்டுப் இறக்குமதி பொருட்களின் மீதான வரியினை உயர்த்தி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
இதற்கு உலக நாடுகள் பலவும் எதிர்ப்பும், கண்டனம் தெரிவித்தன. அத்துடன், உலக நாடுகள் இடையே பேச்சுவார்த்தைகளை நடத்தவும், ஒத்துழைப்புகளைப் பெறவும் அதிகப்படியான வர்த்தக வரிகளையும் ட்ரம்ப் விதித்து வந்தார்.
இதனால் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்து வந்த பல்வேறு நாடுகள் நேரடியாகவும், சில நாடுகள் மறைமுகமாவதும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்படுவதாக கூறி, அவர் விதித்த வரிகளை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

அதாவது, உலக நாடுகளின் மீது அமெரிக்காவின் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (IEEPA) கீழ் வரிகளை விதிப்பதற்கு அதிபர் டிரம்புக்கு எந்த ஒரு அதிகாரமும் கிடையாது அமெரிக்க உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இதனையடுத்து, அவர் விதித்துள்ள வரிகள் செல்லாது எனவும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கு முன்னதாக,கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்க கீழமை நீதிமன்றம் டிரம்ப் விதிக்கும் வரிகள் அனைத்தும் சட்டவிரோதமானவை எனக்கூறி தீர்ப்பளித்திருந்தது இந்நிலையில், அமெரிக்க உச்சநீதிமன்றமும் அதே தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பு டிரம்ப் நிர்வாகத்திற்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
English Summary
US Supreme Court rules that Trumps tariffs are invalid