WhatsApp–இல் புதிய அரசு கட்டுப்பாடு! இனி சிம் கார்டு இல்லாமல் வாட்ஸ்அப் ஓடாது – WhatsApp Web 6 மணி நேரத்துக்கு ஒருமுறை லாக்அவுட்! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் அதிகரித்து வரும் WhatsApp, Telegram உள்ளிட்ட மெசேஜிங் ஆப்களை பயன்படுத்தி நடைபெறும் சைபர் மோசடிகளை கட்டுப்படுத்த மத்திய தொலைத்தொடர்புத்துறை (DoT) கடுமையான புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்திய பயனர்களின் தினசரி பயன்பாட்டில் பெரிய மாற்றம் ஏற்பட உள்ளது.

இதுவரை ஒரு முறை OTP கொடுத்து WhatsApp–ஐ ஆக்டிவேட் செய்தால், அந்த சிம் கார்டை போனில் இருந்து எடுத்து வைத்தாலும் WiFi மூலம் ஆப்பை பயன்படுத்த முடிந்தது. ஆனால், இப்போது இது முற்றிலும் நிறுத்தப்படுகிறது.

• புதிய விதி :
வாட்ஸ்அப்/டெலிகிராம் செயல்பட வேண்டுமெனில், அந்த ஆப்பில் பதிவு செய்யப்பட்ட சிம் கார்டு போனில் கண்டிப்பாக உள்ளே இருக்க வேண்டும்.
மோசடிக்காரர்கள் இந்திய நம்பர்களை வெளிநாடுகளில் வைத்து WiFi மூலம் பயன்படுத்துவதை தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அலுவலகங்களில் WhatsApp Web பயன்படுத்துவோருக்கு இன்னொரு முக்கிய மாற்றம் காத்திருக்கிறது.

• WhatsApp Web புதிய கட்டுப்பாடு :
வாட்ஸ்அப் வெப் ஒருமுறை லாகின் செய்தால் தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தது. இனி அது முடியாது.
ஒவ்வொரு 6 மணி நேரத்துக்கும் WhatsApp Web தானாக லாக்அவுட் செய்யப்படும்.
மீண்டும் உள்நுழைய QR கோடு ஸ்கேன் செய்ய வேண்டி வரும்.

இந்த விதிகள் WhatsApp, Telegram மட்டும் அல்ல—Signal, Snapchat, ShareChat, JioChat உள்ளிட்ட அனைத்து தகவல் தொடர்பு ஆப்களுக்கும் பொருந்தும்.

எப்போது நடைமுறைக்கு?

90 நாட்கள் அவகாசம் – சிம் கட்டாய இணைப்பு மற்றும் 6 மணி நேர லாக்அவுட் முறையை அமைக்க

120 நாட்கள் கெடு – புதிய விதிகளுக்கு இணங்கியதாக அறிக்கை சமர்ப்பிக்க

பயனர்களுக்கு சற்று சிரமமாக இருந்தாலும், சைபர் மோசடிகள் அதிகரித்து வரும் சூழலில் இந்த நடவடிக்கை அவசியம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

New government restrictions on WhatsApp WhatsApp will no longer work without a SIM card WhatsApp Web will be locked out every 6 hours


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?


செய்திகள்



Seithipunal
--> -->