நாமக்கல் கிட்னி கும்பல் வழக்கு! SIT அமைப்பை மாற்ற முடியாது! உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை...!
Namakkal kidney gang case SIT formation cannot be changed Supreme Court gives strict warning
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்களை ஏமாற்றி, ஏழ்மையை பயன்படுத்தி சட்டவிரோத சிறுநீரக தானம் பெற்று மோசடி செய்தது பரமக்குடியைச் சேர்ந்த சத்தீஸ்வரன் எனும் நபர் என பெரும் அதிர்ச்சித் தகவல் வெளிவந்தது. இதேபோன்ற மோசடிகள் திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களிலும் நடைபெற்றதாக செய்திகள் பரவி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த கடுமையான குற்றச்செயலை சி.பி.ஐ. மூலம் விசாரிக்க வேண்டும் எனக் கோரி மனு மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தென்மண்டல ஐ.ஜி. பிரேமானந்த் சின்ஹா தலைமையில், ஐ.பி.எஸ். அதிகாரிகள் நிஷா, சிலம்பரசன், கார்த்திகேயன், அர்விந்த் ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) நியமித்து உத்தரவிட்டது.
இத்தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு சார்பில் வக்கீல் ரீஷ் சுப்ரமணியன், உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.இன்று (வெள்ளிக்கிழமை) அந்த மனு நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் என்.வி. அஞ்சாரியா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பு உச்சநீதிமன்றம் அந்த கோரிக்கையை கடுமையாக நிராகரித்தது.“மதுரை உயர்நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழுவை மாற்ற தேவையில்லை; அந்த உத்தரவில் தலையிட முடியாது” என்று நீதிபதிகள் தெளிவாக கூறி வழக்கை முடித்தனர்.
English Summary
Namakkal kidney gang case SIT formation cannot be changed Supreme Court gives strict warning