என்னை மீண்டும் விசாரணைக்கு அழைக்கவில்லை - நடிகர் பிரகாஷ் ராஜ்.!!
actor prakash raj press meet about gambling app
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் சூதாட்ட செயலிகள் மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, குறிப்பிட்ட சூதாட்ட செயலிகளின் விளம்பரங்களில் திரைப் பிரபலங்கள் நடித்திருப்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்ட 29 நடிகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. இந்த சம்மனை ஏற்று நடிகர் பிரகாஷ்ராஜ் அமலாக்கத்துறை முன்பாக நேற்று ஆஜரானார்.
இதைத் தொடர்ந்து ஐதராபாத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் தெரிவித்ததாவது:- "சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்ததற்காக எனக்கு ஒரு பைசா கூட கிடைக்கவில்லை. இனி இதுபோன்ற ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரங்களில் நடிக்க மாட்டேன். நான் கூறிய தகவல்களை பதிவு செய்து கொண்டனர். என்னை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி அழைக்கவில்லை" என்றுத் தெரிவித்தார்.
English Summary
actor prakash raj press meet about gambling app