பிரேசிலுக்கு 50% வரி விதிப்பு: டிரம்ப் உத்தரவு..பல நாடுகள் அதிர்ச்சி!
50% tax imposed on Brazil Trump order Many countries shocked
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், பிரேசில் நாட்டின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கை மற்றும் பொருளாதார நலன்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளன என கூறி, அந்த நாட்டுக்கு எதிராக மொத்தம் 50% வரி விதிக்கும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் உத்தரவில் உள்ள முக்கிய அம்சங்கள்:பிரேசிலுக்கு ஏற்கனவே 10% வரி விதிக்கப்பட்டு இருந்தது.கூடுதலாக 40% வரி விதிக்கப்படும்.இதனால் மொத்தம் 50% வரி பிரேசிலின் ஏற்றுமதி பொருட்களுக்கு விதிக்கப்படும்.சில முக்கிய பொருட்களுக்கு (விமான பாகங்கள், அலுமினியம், உரம் உள்ளிட்டவை) விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய உத்தரவு 7 நாட்களில் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்காவின் குற்றச்சாட்டு:டிரம்ப் கையெழுத்திட்ட உத்தரவின் படி:பிரேசிலின் கொள்கைகள் அமெரிக்காவின் வர்த்தகத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
அமெரிக்க குடிமக்களின் சுதந்திர பேச்சுரிமையை பாதித்துள்ளது.இதனால் அமெரிக்க வெளியுறவு கொள்கை மற்றும் பொருளாதார நலன்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவுக்கும் வரி உயர்வு:அதேபோன்று, டிரம்ப் இந்தியாவுக்கு 25% வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.ஆகஸ்ட் 1 முதல் இந்திய பொருட்களுக்கு இந்த 25% வரி அமல்படுத்தப்படும்.அமெரிக்க பொருட்களுக்கான இந்தியாவின் வரிகள் உலகிலேயே மிக அதிகம் என்று அவர் குற்றம்சாட்டினார்.
இந்த நடவடிக்கை உலக வர்த்தகத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?பிரேசில் மற்றும் இந்தியாவுக்கு அமெரிக்காவுடன் உள்ள வர்த்தக உறவில் கடுமையான அழுத்தம் உருவாகும்.உலக சந்தையில் பொருட்களின் விலை உயர்வும், வர்த்தக சங்கிலி பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
English Summary
50% tax imposed on Brazil Trump order Many countries shocked