டெல்லி பயணம்...முகமூடி அரசியல்...! - TTV தினகரனின் கடுமையான கண்டனம்...!
Delhi trip mask politics TTV Dhinakarans strong condemnation
அ.தி.மு.க. பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் மக்களை சந்திக்கும் சுற்றுப் பயணத்தை மேற்கொண்ட நிலையில், முன்னாள் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் 10 நாள் கெடுவை விதித்து ஒதிக்கியோரை மீண்டும் மீட்க ஆதரவு தெரிவித்தார்.
இதற்கிடையே, கே.ஏ.செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி 'அமித்ஷா' மற்றும் நிதி மந்திரி 'நிர்மலா சீதாராமனை' சந்தித்தார்.இதனிடையே, 10 நாள் கெடு முடிவடையும்போது, எடப்பாடி பழனிசாமியும் திடீரென டெல்லி புறப்பட்டு, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் இரவு, அமித்ஷா இல்லத்தில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களுடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அங்கு வெளியே வரும்போது, அவர் முகத்தை கைக்குட்டையால் மூடியிருந்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைப் பற்றி அமமுக பொதுசெயலாளர் டி.டி.வி. தினகரன் கண்டனம் தெரிவித்து: “முகத்தை மூடி வர வேண்டிய அவசியம் என்ன? எடப்பாடி பழனிசாமி இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
அண்ணன் பழனிசாமியை இன்று முதல் முகமூடியார் பழனிசாமி என்றுதான் அழைக்க வேண்டும்.மேலும், எடப்பாடி பழனிசாமியிடம் தமிழ்நாட்டு மக்கள் இனி ஏமாற மாட்டார்கள்.வருகிற 2026 தேர்தலில் தோல்வி அவருக்கே உறுதி” என்று தெரிவித்தார்.
English Summary
Delhi trip mask politics TTV Dhinakarans strong condemnation