12 ஆண்டுகளுக்கு பிறகு பூத்துக் குலுங்கிய குறிஞ்சி மலர்கள் - உற்சாகத்தில் சுற்றுலா பயணிகள்.!!
blue kurinchi flowers blooms in gudalur after 12 years
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் பூ குறிஞ்சிப் பூ. நீலக்குறிஞ்சி என்ற இந்த வகைப் பூ, நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கேரள வனப்பகுதியில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூத்துக் குலுங்கும்.

ஸ்ட்ரோபிலாந்தஸ் குந்த்தியானா என்ற அறிவியல் பெயர் கொண்ட அரிய தாவரமான நீலக்குறிஞ்சி தற்போது கூடலூர் தாலுகா ஓவேலி வனப்பகுதியில் 12 ஆண்டுகளுக்கு பிறகு பூத்துள்ளது. இதை வனத்துறையினர் கண்டுபிடித்து அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
குறிஞ்சி மலர்கள் பூத்துக்குலுங்கும்போது ஒட்டுமொத்த மலைப்பகுதியும் நீல நிறத்தில் தெரிவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இந்த நீலக்குறிஞ்சி பூவைப் பார்த்து பரவசமடைந்த சுற்றுலா பயணிகள், தங்களுடைய புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
English Summary
blue kurinchi flowers blooms in gudalur after 12 years