அவதூறு வீடியோ விவகாரம்: ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு...!
Defamation video issue Madhampatti Rangaraj files case against Joy Grisilda
பிரபல சமையல் நிபுணரும் மற்றும் தொழிலதிபருமான 'மாதம்பட்டி ரங்கராஜ்', 'தன்னைப் பற்றி அவதூறு கருத்து தெரிவித்ததாக குற்றம் சாட்டி 'ஜாய் கிரிசில்'-டாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்'.
அந்த மனுவில், “ஜாய் கிரிசில்டா வெளியிட்ட அவதூறு வீடியோக்களை உடனடியாக சமூக வலைதளங்களிலிருந்து நீக்க வேண்டும்” என கோரப்பட்டுள்ளது.

மேலும், தனிப்பட்ட தகராறில் மாதம்பட்டி பகாசாலா நிறுவனத்தின் பெயரை அநியாயமாக இணைத்ததால், 15 நாளுக்குள் ரூ.12.5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேசமயம், “ரங்கராஜ் மாதம்பட்டி பகாசாலா நிறுவனம் என்கிற பெயரால் தான் மக்கள் மத்தியில் அறியப்படுகிறார். மாதம்பட்டி என்ற பெயரை குறிப்பிடாமல் ரங்கராஜ் என்று மட்டும் சொன்னால் யாருக்கும் தெரியாது” என்று ஜாய் கிரிசில்டா தரப்பும் நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கு தற்போது சினிமா ரசிகர்களிடையே, அதிக கவனம் ஈர்த்து வருகிறது.
English Summary
Defamation video issue Madhampatti Rangaraj files case against Joy Grisilda