ரஜினி பட ஹீரோயின் ஹுமா குரேஷிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்: மாப்பிள்ளை யார் தெரியுமா..?
Huma Qureshi secret engagement
சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா மற்றும் அஜித்தின் வலிமை போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ஹுமா குரேஷி. இவர் இந்தியில் பிரபல நடிகையாகவும் பிஸியாகவும் உள்ளவர். இவர் நடிப்பில் பயான் என்ற இந்தி படம் சமீபத்தில் டொரண்டோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு இருந்தது.
அந்த விழாவில் ஹுமா குரேஷியும் கலந்துகொண்டார். தற்போது நடிகை ஹுமா குரேஷிக்கு அவரது காதலர் ரஷித் சிங் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. சமீபத்தில் இவர்களுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. நடிகை ஹுமா குரேஷியின் காதலன் ரஷித் சிங் பாலிவுட்டில் பல முக்கிய நடிகர்களுக்கு நடிப்பு பயிற்சி கொடுத்து வருபவர்.

ஹுமா குரேஷி மற்றும் ரஷித் சிங் இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. ஆனாலும், அவர்கள் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. ஆனால், டொரண்டோ பட விழாவில், ஹுமா குரேஷி தனது விரலில் புதிதாக மோதிரம் அணிந்திருந்த புகைப்படம் வைரலாகியுள்ளது. இதனால் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்திருப்பதை அவரது நெருங்கிய வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.
ஹுமா அல்லது ரச்சித் இருவரும் இவர்களுடைய டேட்டிங் மற்றும் நிச்சயதார்த்தம் குறித்து செய்திகளைப் அறிவிக்கவில்லை. இந்த செய்திகள் அவரது வரவிருக்கும் படங்களான பயான் மற்றும் ஜாலி LLB 3 ஆகியவை படங்களை புரமோட் செய்தற்காக இருக்கும் என நம்பப்படுகிறது.
English Summary
Huma Qureshi secret engagement