இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் மருத்துவமனையில் திடீர் அனுமதி.!!
music director sangar ganesh admitted hospital
தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் மூச்சுத் திணறலால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
80-களில் பிரபல இசையமைப்பாளராக இருந்தவர் சங்கர் கணேஷ். தற்போதும் இவர் உற்சாகமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பாடல் பாடி வருகிறார். இந்த நிலையில், சங்கர் கணேஷ் மூச்சு திணறல் ஏற்பட்டு சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒரு விழாவில் பாடல் பாடுவதற்காக சென்றுக்கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் உடனடியாக அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
English Summary
music director sangar ganesh admitted hospital