தமிழகத்தில் 1.50 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள்! இந்து முன்னணி வெளியிட்ட அறிவிப்பு!
Vinayagar Chaturthi tamilnadu hindu munnani
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்பட உள்ளதாக, இந்து முன்னணி தலைவர் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் “மாற்றம் தந்த முருக பக்தர்கள் மாநாடு – இந்த எழுச்சி திக்கெட்டும் பரவட்டும்” என்ற தலைப்பில் இந்து முன்னணி கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற இந்து முன்னணி தலைவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “மதுரையில் நடைபெற்ற முருக பக்தர் மாநாடு, இந்துக்களிடையே ஒற்றுமையை உறுத்தியுள்ளது. இந்து முன்னணி சமுதாயங்களை ஒருங்கிணைத்து, இந்துக்களுக்காக வாதாடும் இயக்கமாக செயல்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மலைக் கோட்டையிலுள்ள அபிராமி அம்மன் கோவிலில் விக்ரகங்கள் இல்லாத நிலை உள்ளது. இங்கு விக்ரகங்களை பிரதிஷ்டை செய்து, குடமுழுக்கு நடத்த அனுமதி அளிக்க இந்து அறநிலையத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கிறோம். விரைவில் அபிராமி அம்மன் பக்தர் மாநாடு திண்டுக்கல்லில் நடைபெறும்.
கடந்த ஆண்டு 15 லட்சம் வீடுகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு பொது இடங்களிலும் மண்டலங்களிலும் விரிவாக நிகழ்ச்சி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பாதிக்கப்படுவதற்கான ஒரு முக்கிய காரணம் போதைப் பொருள் பயன்பாடு. எனவே, அரசு இதை கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றார்.
English Summary
Vinayagar Chaturthi tamilnadu hindu munnani