ஆணவக்கொலை அட்டூழியத்தின் மீது அரசு துரிதமாக நிச்சயம் செயல்பட வேண்டும்!!!- மாரி செல்வராஜ் - Seithipunal
Seithipunal


நேற்று வெளிவந்த திருநெல்வேலி ஆணவப்படுகொலை சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதில் வெவ்வேறு சமூகங்களைச் சார்ந்த கவினும் சுபாசினி என்ற பெண்ணும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து சில மாதங்களுக்கு முன்னர் அறிந்த சுபாசினியின் பெற்றோர் கவின்குமாரையும் அவரது பெற்றோரையும் கண்டித்து எச்சரித்துள்ளனர்.

இதனால் கவின்குமாரின் பெற்றோர் கவின்குமாரை கடுமையாக கண்டித்துள்ளனர்.இந்த நிலையில் சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த கவின் விபத்தில் சிக்கி திருச்செந்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தாத்தாவை பார்ப்பதற்காக ஊருக்கு சென்றுள்ளார்.

அப்போது திருநெல்வேலியில் சித்த மருத்துவராக தான் பணியாற்றும் தனியார் சிகிச்சை மையத்தில் கவினின் தாத்தாவிற்கு சிகிச்சை அளிக்கலாம் என சுபாஷினி தெரிவித்ததன் அடிப்படையில் சுபாஷினியிடம் ஆலோசனை பெறுவதற்கு கவின் அவரது அம்மா மற்றும் மாமா ஆகிய மூவரும் சிகிச்சை மையத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கு சிகிச்சை மையத்தின் உள்ளே சுபாஷினியிடம் கவினின் அம்மாவும் மாமாவும் பேசிக் கொண்டிருந்தபோது வெளியே நின்று கொண்டிருந்த கவினை சுபாஷினியின் தம்பி சுர்ஜித் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று தனது வீட்டு வாசலில் வைத்து கவினை வெட்டி படுகொலை செய்துள்ளான்.அதன் பிறகு, காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்ததாக தெரியவருகிறது.

இயக்குநர் மாரி செல்வராஜ்:

இந்த நடவடிக்கையை கண்டித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பதிவிட்டுள்ளதாவது, "நீளும்
சாதிய அருவருப்பின்
அட்டூழியம் …
சாதிய பெருமைவாதத்திற்கு எதிரான
நடவடிக்கைகளை அரசு இன்னும் துரிதமானதாகவும் கடுமையானதாகவும் நிச்சயம் செயல்படுத்தியே ஆகவேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

government must act swiftly and decisively atrocity manslaughter Mari Selvaraj


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->