வெறும் 5 மணிநேரம் தானா? பிரதமர் மோடியின் மணிப்பூர் பயணத்தை விமர்சித்த காங்கிரஸ்!
Congress say about PM Modi Manipur visit
மணிப்பூரில் பிரதமர் நரேந்திர மோடி செலவிட்ட குறுகிய நேரத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது. 2023இல் தொடங்கிய இன மோதல்களுக்கு பிறகு, சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து அங்கு சென்ற பிரதமர், ஐந்து மணி நேரத்துக்கும் குறைவாகவே தங்கியிருந்தார்.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து தெரிவித்தார். “மணிப்பூர் மக்கள் பிரதமரை நேரில் சந்திக்க ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் அவர் அங்கு வந்தது கட்டாயத்தால் ஏற்பட்ட சூழ்நிலையாகவே தெரிகிறது. தரையிறங்கியதிலிருந்து புறப்பட்டதுவரை, ஐந்து மணி நேரத்துக்கும் குறைவாகவே அவர் தங்கி சென்றார்.
உலக நாடுகள் முழுவதும் பிரசாரத்திற்காக நாட்கள் கணக்கில் பயணம் செய்ய நேரமுள்ள பிரதமருக்கு, மணிப்பூர் மக்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் இதுவோ? இது மக்களின் உணர்ச்சிகளைப் பொருட்படுத்தாத செயலாகும். தாமதமாக வந்திருந்தாலும் அவர் செலவிட்ட நேரம் ஏற்றதாக இல்லை” என்றார்.
இரண்டு ஆண்டுகளாக வன்முறை மற்றும் பதற்றத்தில் சிக்கியுள்ள மணிப்பூர் மக்களுக்கு பிரதமரின் இந்தக் குறுகிய வருகை ஏமாற்றத்தை ஏற்படுத்தியதாக காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது.
English Summary
Congress say about PM Modi Manipur visit