உதவிகேட்ட கல்லூரி மாணவியிடம் தங்கும் விடுதியில் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்ட ஓட்டுநர் கைது..!
Driver arrested for sexually assaulting college student in Chinthadirpet hostel after she asked for help
கன்னியாகுமரியில் உள்ள ஆயுர்வேத கல்லூரியில், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 20 வயது மாணவி ஒருவர் 02-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் இவர், சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக வந்துள்ளார்.
இதற்காக அவர், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்துள்ள்ளார். அங்கு அவருடைய அறையில் செல்போன் இணைப்பு கிடைக்காததால் பக்கத்து அறைக்கு சென்று உதவி கேட்டுள்ளார். ஆனால், அந்த அறையில் தங்கியிருந்த நபர், திடீரென்று மாணவியை கட்டிபிடித்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். உடனே அந்த மாணவி சத்தம் போட்டு உதவி கோரியுள்ளார்.

இதைத்தொடர்ந்து அந்த நபர் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் பெண்கள் வன்கொடுமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதில் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தப்பியோடியது நபர், சென்னை செங்குன்றத்தை சேர்ந்த ஓட்டுநர் சுகேந்திரன் (31 வயது) என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர் மீது ஏற்கனவே 03 வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Driver arrested for sexually assaulting college student in Chinthadirpet hostel after she asked for help