SK ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோவை ரிலீஸ் செய்த மதராசி பட குழு!
Madarasi film team released SK first single promo
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் இணைந்து உருவாக்கிய திரைப்படம் ''மதராஸி''.இவர் இயக்கத்தில் சிவகார்த்திகேயனது 23-வது படமாக உருவாகியுள்ளது.இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், பிஜு மேனன், வித்யூத் ஜம்வால், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைத்துள்ளார்.இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.இந்த ப்ரோமோ வீடியோ மிகவும் நகைச்சுவையாக உருவாகியுள்ளது.இதில் சிவகார்த்திகேயன், ஏ.ஆர் முருகதாஸ், அனிருத் என் அனைவரும் லுங்கியுடன் வலம் வருகின்றனர்.
இப்பாடலை சூப்பர் சுப்பு வரிகளில் சாய் அபயங்கர் பாடியுள்ளார். இந்தப் பாடல் வரும் ஜூலை 31 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.இதன் காரணமாக சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் இருக்கின்றனர். இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
English Summary
Madarasi film team released SK first single promo