கவின், நயன்தாரா இணைந்து நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்.!!
kavin and nayanthara new movie update
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முன்னணி இடத்தில் இருப்பவர் நடிகர் கவின். 'கனா காணும் காலங்கள்' சீரியலின் மூலம் சின்னத்திரை பயணத்தை துவங்கிய இவர் 'சரவணன் மீனாட்சி' சீரியலில் வேட்டையனாக வந்து மக்கள் மனதைக் கவர்ந்தார்.
தொடர்ந்து அவர், 'நட்புனா என்ன தெரியுமா' படத்தில் கதாநாயகனாக வெள்ளித்திரைக்கு அறிமுகமாகினார். இருப்பினும் பிக்பாசில் பங்கேற்ற பிறகு கவின் நடிப்பில் ஓடிடி- யில் மட்டும் வெளியான 'லிஃப்ட்' திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
அதன் பிறகு கவின் 'ஸ்டார்', 'கிஷ்', 'டாடா', 'ப்ளடி பக்கர்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது கவின் விஷ்ணு எடவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நயன்தாரா மற்றும் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த புதிய படத்தின் அப்டேட் இன்று மாலை 05.04 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
English Summary
kavin and nayanthara new movie update