தி.மு.க கூட்டணியில் பரபரப்பு! தொகுதி பேச்சு வார்த்தை நடத்த தனி குழு அமைத்த வைக்கோ..! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபை தேர்தல் தேதி அடுத்த மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், மாநில அரசியல் அரங்கம் கடந்த ஒரு மாதமாகவே தீவிரமான பரபரப்பில் இருந்து வருகிறது. மேலும், கட்சிகள் கூட்டணி கணக்குகள், தொகுதி பங்கீடு விவாதங்கள், உள்துறை ஆலோசனைகள் என தேர்தல் சூழல் நாளுக்கு நாள் சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில்,தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க,ம.தி.மு.க.,காங்கிரஸ், வி.சி.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்துள்ளன.

அதே நேரத்தில், அ.தி.மு.க. அணியில் பா.ஜ.க., அ.ம.மு.க., பா.ம.க., த.மா.கா., புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகள் இடம்பிடித்து, இரு அணிகளும் வலுவான தேர்தல் சமன்பாட்டை உருவாக்கியுள்ளன.

இந்த சூழலில், தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. சார்பில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தனி குழு அமைக்கப்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

அந்த குழுவில் அவைத்தலைவர் ஜீவன், சேஷன், அர்ஜுனராஜ், செந்திலதிபன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.மேலும், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி ஒதுக்கீடு விவகாரங்களை ஒருங்கிணைக்க தி.மு.க. சார்பிலும் பேச்சுவார்த்தை குழு உருவாக்கப்பட்டுள்ளது.

டி.ஆர். பாலு தலைமையில் செயல்படும் அந்த குழுவில் கே.என். நேரு, திருச்சி சிவா, ஆ. ராசா, ஆர்.எஸ். பாரதி, எ.வ. வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். தேர்தலை முன்னிட்டு இரு தரப்பும் தீவிர ஆலோசனைகளில் இறங்கியுள்ளதால் அரசியல் சூழல் மேலும் பரபரப்பாக மாறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

There stir DMK alliance Vaiko forms separate team hold constituency talks


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->