மகேஷ் பாபுவுக்குப் பின் ராஜமவுலி கைகோர்க்கும் கனவு திட்டம் யாருடன் தெரியுமா...?
Do you know who Rajamouli join hands his dream project after Mahesh Babu
இந்திய திரையுலகின் படைக்கலை மன்னன் எனப் போற்றப்படும் எஸ்.எஸ். ராஜமவுலி, தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் 'மகேஷ் பாபு'வுடன் இணைந்து உருவாக்கி வரும் அதிரடி மாபெரும் திரைப்படத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.இந்த படத்துக்காக 'மகேஷ் பாபு' 2.5 ஆண்டுகள் நீளமான கால்ஷீட்டை ஒதுக்கியுள்ளார் என்பது தான் அதன் அளவை காட்டுகிறது.

இதில் பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் இப்படமானது, காசியின் வரலாற்றை மையமாகக் கொண்ட வித்தியாசமான கதை சொல்லப் போகிறது.மேலும், ரூ. 450 கோடி செலவில் உருவாகி வரும் இந்த மாபெரும் படம், இரு பாகங்களாக திரைக்கு வரவுள்ளது.
அதுமட்டுமின்றி, 2027ஆம் ஆண்டில் இதன் முதல் பாகம் வெளியாகும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இந்நிலையில், ராஜமவுலியின் அடுத்த படத் திட்டம் குறித்து தற்போது ரசிகர்களிடையே புதிய பரபரப்பு நிலவுகிறது.
மேலும், உள்ளக வட்டார தகவல்களின்படி, மகேஷ் பாபு படத்துக்குப் பிறகு, ராஜமவுலியின் கேமரா கண்களில் மின்னப் போவது அல்லு அர்ஜுன் என்று தெரிவிக்கப்படுகிறது. இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை ஏற்கனவே முடிந்துவிட்டதாகவும் திரையுலக வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
English Summary
Do you know who Rajamouli join hands his dream project after Mahesh Babu