என் படங்களில் இந்த ஒரு விஷயம் எப்போதுமே இருக்காது...! - சாய் பல்லவி ரசிகர்கள் shock! - Seithipunal
Seithipunal


மலையாள திரையுலகின் மூலம் ப்ரேமம் படத்தில் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்களை கிறங்கடித்தவர் நடிகை ''சாய் பல்லவி''. தமிழகத்தை சேர்ந்த இவர் தனக்கென ஒரு பாணியை வைத்துக்கொண்டு திரையுலகில் நடித்து வருகிறார்.

இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள படங்களில் மட்டுமே நடித்துவரும் சாய்பல்லவி பொது நிகழ்ச்சிகளில் கூட பாரம்பரியமாக சேலை அணிந்தவாறே வருவதை கவனிக்க முடியும்.இவர் தற்போது தென்னிந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக உள்ளார்.

அதுமட்டுமின்றி, பான் இந்தியா படமாக உருவாகி வரும் 'சீதா ராம்' படத்தில் நடித்து வருகிறார்.இதில் இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

இவர் படத்தில் பெரும்பாலும் மேக் அப் இல்லாமலே நடிப்பதாக அதில் தெரிவிக்கிறார். தனது முதல் படத்தில் இருந்தே மேக் அப் இன்றியே நடித்து வருவதாகவும் அதிகபட்சமாக ஐ லைனர் மட்டுமே பயன்படுத்தியுள்ளேன் என்றும் சாய் பல்லவி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும்,சாய் பல்லவியின் இந்த பேட்டி மீண்டும் வைரல் ஆகி வரும் நிலையில், அழகுக்கு எதற்கு அழகு சேர்க்க வேண்டும் என்று இணையத்தில் அவரது ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

one thing will never my films Sai Pallavi fans shock


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->