கவின் கொலைக்கு மாரி செல்வராஜ் தான் காரணம்! ஜாதி பார்த்து தானே கண்டனம் தெரிவிக்குறீங்க... பிரபல யூடியூபர் விளாசல்! - Seithipunal
Seithipunal



தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் அவரது மனைவி செல்வி. இவர்களது மகன் கவின்குமார் (26), சென்னையில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்துவந்தார்.

கவின்குமார், பாளையங்கோட்டை KTC நகரைச் சேர்ந்த சித்த மருத்துவத்தில் பணியாற்றும் பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதாலே பெண்ணின் தரப்பில் எதிர்ப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜூலை 27ஆம் தேதி பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்ற கவின்குமாரை, அந்த பெண்ணின் தம்பி சுரஜித் (24) அரிவாளால் வெட்டி படுகொலை செய்தார்.

இந்தக் கொலைக்குப்பின், சுரஜித் நேரடியாக காவல்துறைக்கு சென்று சரணடைந்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், இயக்குனர் மாறி செல்வராஜ், "நீளும் சாதிய அருவருப்பின் அட்டூழியம் … சாதிய பெருமைவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை அரசு இன்னும் துரிதமானதாகவும் கடுமையானதாகவும் நிச்சயம்  செயல்படுத்தியே ஆகவேண்டும்" என்று கவின் கொலைக்கு கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இதற்க்கு திரைப்பட விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி, "கொடிய இறப்பாவே இருந்தாலும் ஜாதி பார்த்து தானே கண்டனம் தெரிவிக்குறீங்க மாரி செல்வராஜ்? 

இதே கண்டனம் அஜித்குமாருக்கு ஏன் இல்லை ? ஏன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை ? ஏன் தமிழ்நாடு அரசுக்கு இதே அழுத்தம் தரவில்லை?  பிரச்சனையின் ஆரம்பப்புள்ளியே நீங்க தான்" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

thoothukudi kavin case mari selvaraj prasanth rangasamy


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->