15000 ஊழியர்களை பணி நீக்கம் செய்த காரணத்தை வெளியிட்ட ceo சத்யா நாதெல்லா...!
CEO Satya Nadella reveals reason for laying off 15000 employees
இந்த ஆண்டு 15,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த சத்யா நாதெல்லா தலைமையிலான ''மைக்ரோசாப்ட்'', தொழில்நுட்ப உலகில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த பணிநீக்கங்களுக்கு முக்கிய காரணம், நிறுவனம் செயற்கை நுண்ணறிவு (AI) நோக்கி விரைவாக மாறுவதே என்று தலைமை நிர்வாக அதிகாரி நாதெல்லா தெரிவித்துள்ளார்.

சத்யா நாதெல்லா:
மேலும்,ஊழியர்களுக்கு அவர் அனுப்பிய செய்தியில், "வேறு எதற்கும் முன், என்னை மிகவும் பாதித்து வரும் விஷயத்தைப் பற்றியும், உங்களில் பலர் சமீபத்தில் வேலை நீக்கம் செய்யப்பட்டதைப் பற்றியும் நான் பேச விரும்புகிறேன்.இந்த முடிவுகள் நாம் எடுக்க வேண்டிய மிகக் கடினமான முடிவுகளில் ஒன்றாகும்.
வெளியேறியவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அவர்களின் பங்களிப்புகள் ஒரு நிறுவனமாக நாம் யார் என்பதை வடிவமைத்துள்ளன, இன்று நாம் நிற்கும் அடித்தளத்தை உருவாக்க உதவுகின்றன. அதற்காக, நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
அண்மையில் பணிநீக்கம் செய்யப்பட்ட 9,000 ஊழியர்களையும் சேர்த்து, இந்த ஆண்டு 15,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மைக்ரோசாப்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.மேலும், இந்த கடினமான முடிவுகள் தவறல்ல என்று நாதெல்லா தற்போது தெரிவிக்கிறார்.இந்த பணிநீக்கங்களால் மைக்ரோசாப்டின் கேமிங் பிரிவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மைக்ரோசாப்ட் AI தொழில்நுட்பத்தில் முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனம் AI உள்கட்டமைப்பில் 80 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய இலக்கு வைத்துள்ளது. இந்த முதலீடுகள் AI தொழில்நுட்பங்களை உருவாக்கவும், அவற்றை அதன் தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் ஒருங்கிணைக்கவும் பயன்படுத்தப்படும்.
English Summary
CEO Satya Nadella reveals reason for laying off 15000 employees