புதிதாக வருபவர்களுக்கு திமுகவை பற்றி விமர்சித்தால் தான் அடையாளம் கிடைக்கும் - கனிமொழி எம்.பி.!!
mp kanimozhi speech in aringar anna birthday celebration in kanniyakumari
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரி ரவுண்டானா சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு தி.மு.க.துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது அவருடன் அமைச்சர் மனோ தங்கராஜ், மேயர் மகேஷ், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்:- "புதிதாக யார் அரசியலுக்கு வந்தாலும் முதலில் திராவிட முன்னேற்ற கழகத்தை பற்றி தான் பேசுவார்கள். அப்போது தான் அவர்களுக்கு அடையாளம் கிடைக்கும் என்பது தெளிவான ஒன்று.
தமிழகத்தின் மிகப்பெரிய ஒரு ஆளுமையாக, தமிழகத்தின் சிந்தனை போக்கை அரசியல் நிலையின் போக்கை மாற்றி அமைத்த ஒரு பேராளுமையாக இருக்க கூடியவர் தான் அண்ணா. அவரது கருத்துக்களின் வழி நடைபெற்றுக் கொண்டிருக்கிற ஆட்சி தி.மு.க. ஆட்சியாகும்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
mp kanimozhi speech in aringar anna birthday celebration in kanniyakumari