உல்லாச அழைப்பின் பின்னால் மரண வலை! 26 ஸ்டேப்ளர் பின்களால் சித்திரவதை...! நடந்தது என்ன?
death trap behind flirting invitation Torture with 26 stapler pins What happened
கேரளாவின் பத்தனம்திட்டா அருகே அரங்கேறிய சம்பவம் காவலர்களையே சம்பிக்க வைத்துள்ளது. சரல்குன்னுவைச் சேர்ந்த ஜெயேஷ் (29), அவரது மனைவி ரஷ்மி (23) ஆகியோர், வாலிபர்களை கவர்ந்து உல்லாச வலையில் விழ வைத்து பின் பீதி தரும் சித்ரவதைக்கு உட்படுத்தி வந்தது அம்பலமாகியுள்ளது.
இதில் ஆலப்புழையைச் சேர்ந்த வாலிபருடன் ரஷ்மி இன்ஸ்டாகிராம் மூலம் பழகினார். பிறகு "உல்லாசமாக இருக்கலாம்" என ஆசைவார்த்தை சொல்லி, கடந்த 1ம் தேதி தனது இல்லத்திற்கு அழைத்தார். அந்த வலையில் சிக்கிய வாலிபர், வீட்டிற்குள் நுழைந்ததும், அங்கு ஒளிந்திருந்த கணவர் ஜெயேஷ் அனைத்தையும் செல்போனில் பதிவு செய்தார்.

அதையடுத்து இருவரும் சேர்ந்து, வாலிபரை மிரட்டி, அவரிடமிருந்த ரூ.6000, மற்றும் விலை உயர்ந்த செல்போனையும் பறித்தனர். அதில் மட்டும் நிற்காமல், கைகளை கட்டி தொங்கவிட்டு, மர்ம உறுப்பில் 26 ஸ்டேப்ளர் பின்களை அடித்து கொடூரமாக சித்ரவதை செய்தனர். மேலும், கை விரல் நகங்களையும் பிடுங்கி துன்புறுத்தினர்.
இதனால், வலி தாங்காமல் அலறிய வாலிபரின் வாயை துணியால் கட்டி, மனிதர்கள் போகாத பகுதியில் வீசி எறிந்தனர். அப்போது அங்கிருந்து சென்ற ஒருவர் முனகும் சத்தத்தைக் கேட்டு, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வாலிபரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.இந்த தகவலறிந்த ஆரன்மூளா காவலர்கள் விரைந்து வந்து, வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.
அதன்பின் ஜெயேஷ் மற்றும் ரஷ்மி தம்பதியரை கைது செய்தனர்.மேலும், காவலர்கள் விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இதனை பணத்திற்காகவே ரஷ்மி பல இளைஞர்களை ஆசை வார்த்தைகளால் வலையில் விழ வைத்து, பின்னர் கணவருடன் சேர்ந்து பணம்–செல்போன்களை பறித்ததும், அதன்பின் கட்டித்தொங்கவிட்டு சித்ரவதை செய்ததும் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமின்றி,ஓணம் தினத்தன்று கூட, ரான்னியைச் சேர்ந்த ஒரு இளைஞரை ஏமாற்றி, அதே முறையில் சித்ரவதை செய்ததும் காவல் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. தற்போது இந்த சம்பவம் தொடர்பாக ஆரன்மூளா காவலர்கள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
death trap behind flirting invitation Torture with 26 stapler pins What happened