கள்ள உறவு…! மதுவில் மயக்கம்…! கொலைக்கான கொடிய கதை வெளிச்சத்துக்கு வந்தது...! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் பகுதியில் அரங்கேறிய அதிர்ச்சிகரமான சம்பவம்.அங்குள்ள நேஹா என்ற இளம்பெண், தனது கணவர் நாகேஷ்வருடன் விருப்பமின்றி திருமணம் ஆன நாளிலிருந்து மனக்கசப்புடன் வாழ்ந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த திருமண வாழ்க்கையை முறியடிக்க பலமுறை கேட்டபோதும், நாகேஷ்வர் விவாகரத்திற்கு தயங்கியதால் தம்பதியருக்குள் விரிசல் அதிகரித்தது.

இந்நிலையில், நேஹாவுக்கும் அப்பகுதியைச் சேர்ந்த ஜிதேந்திராவுக்கும் கள்ள உறவு உருவானது.இதைத் தொடர்ந்து, கணவனை வழியிலிருந்து அகற்ற திட்டமிட்ட இருவரும், சம்பவத்தன்று நாகேஷ்வருக்கு அதிக அளவு மதுவை ஊட்டி மயக்கத்தில் ஆழ்த்தினர்.

அதற்குப் பிறகு இருவரும் சேர்ந்து,வசமாக அவரது கழுத்தை நெரித்து உயிரை பறித்தனர்.இதையடுத்து, கொலை வெளிச்சம் பார்க்காமல் இருக்க, நாகேஷ்வரின் உடலை பைக்கில் ஏற்றி சுமார் 25 கி.மீ தூரம் எடுத்துச் சென்று, சாலை விபத்தில் உயிரிழந்தது போல சித்தரிக்க திட்டமிட்டனர்.

ஆனால் சாலையோரம் கிடந்த உடலைக் கண்ட உள்ளூர் மக்கள் உடனே காவலுக்கு தகவல் தெரிவித்ததால், நேஹாவும் ஜிதேந்திராவும் வலையில் சிக்கினர்.இருவரிடமும் காவலர்கள் தற்போது தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fake relationship Drunk alcohol gruesome story murder came to light


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->