முதல் நாள் வேலைக்கு வந்த சப்- கலெக்டரையே தோப்புக்கரணம் போட வைத்த ஊர்...! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேசத்தில் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் சப்-கலெக்டராக ஐ.ஏ.எஸ். அதிகாரி ''ரிங்கு சிங் ராஹி'' நியமிக்கப்பட்டார். நேற்று அவரது பணியின் முதல் நாளிலேயே அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அங்கு ஒரு பொது கழிப்பறைக்கு வெளியே ஒருவர் சிறுநீர் கழித்துள்ளார்.

இதைக் கண்ட சப்-கலெக்டர் கோபமடைந்தார். அவருக்கு தண்டனை வழங்க முடிவு செய்த 'ரிங்கு சிங்' அந்த நபரை தோப்புக்கரணம் போட வைத்தார்.இந்த நடவடிக்கையை கண்ட அப்பகுதி வக்கீல்கள் மற்றும் அப்பகுதி பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவர்கள் சப்-கலெக்டருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதோடு, 'ரிங்கு சிங் ராஹி' செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கோஷமிட்டனர்.

இதன் காரணமாக, அங்கு பரபரப்பு நிலவியது. இந்த நிலைமை விபரீதமாவதை கண்ட சப்-கலெக்டர் வக்கீல்கள் முன்னிலையில் தனது காதுகளை பிடித்து தோப்புக்கரணம் போட்டார்.

அதுமட்டுமின்றி, கைகளை கூப்பி மன்னிப்பு கேட்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இதுதொடர்பாக ரிங்கு சிங் ராஹி தெரிவிக்கையில், வக்கீல்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் நல்ல உறவு பாதிக்கப்படும் என்பதால் தானாக முன்வந்து மன்னிப்பு கேட்டேன்" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

town that made subcollector appolozise on his first day work


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->